இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் என முகமது பின் காசீமை வரலாற்று பாடப்புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. பல்லாயிரம் இந்து மக்களை கொன்று குவித்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இவையெல்லாம் உண்மையா? புத்த, சமண மதத்தினர் வசித்த நாட்டில், முகமது பின் காசிம் இந்துக்களை கொன்றதாக பரப்பும் அவதூறு எவ்வளவு நகைச்சுவையானது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.அரேபியர்களின் பொருள், பெண்கள், குழந்தைகளை அபகரித்துக் கொண்ட, அப்போதைய சிந்து ஆட்சியாளரை பழிவாங்கவே அரேபியப் படை சிந்து பகுதிக்குள் நுழைந்தது. அப்போது இந்தியா என்ற நாடு இல்லை. இப்போதைய இந்தியாவிலும், சிந்து பகுதி இல்லை.முகமது பின் காசிம் நுழைந்தது இப்போதைய பாகிஸ்தானில் தான். எனவே இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர் முகமது பின் காசிம் என்ற சொல்லாடலே தவறானது.அல் வலீத் என்ற அரேபிய உமாயத் கலீபாவுக்கு, இலங்கையின் அப்போதைய அரசன், முத்து, நவ ரத்தினங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். அதுமட்டுமின்றி, ஹஜ் யாத்திரை பயணிகள், அரேபியர்களின் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 8 கப்பல்கள் புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.இவர்களின் கப்பல், கராச்சி (தேபல்) கடற்பகுதியை நெருங்கிபோது, ராஜா தாஹீர் என்ற பிராமண மன்னனின் அதிகாரிகள் சிலரால் வழிமறித்து சூறையாடப்பட்டது. சிலரோ கடற்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அதேபோல் பெண்கள், குழந்தைகளும் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்டவர்களில் ஒரு இளம்பெண், அங்கிருந்து தப்பி, அரேபியா சென்றடைகிறார். அவர் கலீபாவிடம் நடந்த சம்பவங்களை விளக்குகின்றார்.
இதனால் ஆத்திரமடைந்த கலீபா இதுகுறித்த நடவடிக்கை எடுக்குமாறு ஹெஜாசின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப்புக்கு உத்தரவிடுகிறார். பிடிபட்ட, பெண்கள் குழந்தைகளை விடுவிப்பதோடு, திருடப்பட்ட பொருட்களை திருப்பித் தர வேண்டும், அத்துமீறிய அதிகாரிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் ஆகிய கட்டளைகளோடு, உபைதுல்லா தலைமையில் கூபாவில் இருந்து ஒரு சிறு படை சிந்துவுக்கு புறப்படுகின்றது.ஆனால் அந்த படையினரின் கோரிக்கையை ராஜா தாஹிர் ஏற்கவில்லை. அந்த படையை தோற்கடித்ததோடு, உபைதுல்லா கொல்லப்படுகின்றார். தொடர்ந்து, புதைல் இப்னு தக்பா தலைமையில் 2வது படை புறப்படுகின்றது. இந்த படை கராச்சியில் வைத்து, ராஜா தாஹிரின் மகன் ஜெயசிம்மாரின் படையால் தோற்கடிக்கப்பட்டதோடு, அரேபிய படைத் தலைவர் தக்பாவும் கொல்லப்படுகிறார்.இந்தச் சம்பவங்களை கேள்விப்பட்ட ஹஜ்ஜாஜ் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார். இதனால் சிந்து பகுதியில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதோடு, மன்னர் தாஹிருக்கு தகுந்த பாடம் கற்பிக்க உறுதி கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது மருமகனான 17 வயது இளைஞன் முகமது பின் காசீம் தலைமையில், சிந்து மீது படையெடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு இந்திய வரலாற்றை ஆயிரம் ஆண்டுகள் புரட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.6000 குதிரைப்படை, 3000 ஒட்டகப்படை, கோட்டைகளை தகர்க்கும் இயந்திரங்கள், அபுல் அஸ்வத் ஜஹான் என்பவரின் தலைமையில் மேலும் ஒரு அரபுப் படை சேர்ந்து கொண்டது. மொத்தம் 25 ஆயிரம் வீரர்களை கொண்ட ஒரு பிரமாண்ட படை, முகமது பின் காசீம் தலைமையில் சிரியாவில் இருந்து சிந்து நோக்கி அணிவகுத்தது.
முகமது பின் காசீமின் படை மன்னன் ராஜா தாஹீரின் படையை விட அளவில் சிறியது. ராஜா தாகிரின் படையில் கராச்சியில் மட்டும் 40 ஆயிரம் வீரர்கள் இருந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக அரேபிய முஸ்லீம் படை ஒன்றும் இருந்துள்ளது. இவர்கள் கலீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள். எனவே குறைவான வீரர்களுடன் முன்பின் தெரியாத ஒரு ஊரில் காலடி எடுத்து வைத்தார் முகமது காசீம்.
சிந்து நதியை கடக்க முடியாமல் சுமார் 50 நாட்கள் முகாமிட்டு சோர்ந்து போன அரபிப் படை பின்னர் அதிரடியாக ஒரு திட்டத்தை நிறைவேற்றியது.. சிந்து நதியின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு, படகுகளை கொண்டு, பாலம் அமைத்து, அதில் இருந்து, நதியை கடந்தனர். இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஜாட்கள் மற்றும் மீனவர்கள் உதவினர். பிறகு இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.ராஜா தாஹிர் வீரம் மிக்கவராக இருந்தததோடு, அவரது வீரர்களையும் அவ்வாறு வார்த்தெடுத்து வந்தார். மாபெரும் யானைப்படை, குதிரைப்படை, கலாட்படை என பிரமாண்ட படையுடன் களத்திற்கு வந்த தாஹிரின் முன், எதிரிப் படைகளோ, சொற்பமாக காணப்பட்டன. அரபியப் படையில் குதிரைகளும், ஒட்டகங்களும், காலாட்படைகளும் இருந்தன. இது இறைவனுக்காக நடைபெறும் போர் என வீரர்கள் முன் உரை நிகழ்த்தினார் அப்படையின் தளபதி முகமது பின் காசிம். முஸ்லீம் வீரர்களின் கண்கள், வெற்றி வேட்கையால் நெருப்பை கொப்பளித்துக் கொண்டிருந்தன.போர் தொடங்கியது. எதிர்பார்த்தவாறே, ராஜா தாஹிரின் யானைப்படையால் காசிமின் வீரர்கள் பிழிந்து எரியப்பட்டனர். வெள்ளை யானை ஒன்றில் அமர்ந்து, மன்னர் தாஹிர் தனக்காக வடிவமைத்த ஒரு பிரத்யோக ஆயுதத்தை கொண்டு எதிரி வீரர்களை வெட்டி வீழ்த்தினார்.வட்டமான அந்த ஆயுதத்தின் முனையில் கூர்மையான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதனை வீசினால் அது, எதிரிகளின் தலையை தனியாக எடுத்து விடும்.
போர்க்களத்தில் வீர தீரமாக செயல்பட்ட, ராஜா தாஹிரின் தலையை கொய்வேன் என சபதமெடுத்த, ஆப்ரிக்க முஸ்லீம் வீரன் ஒருவன், தாஹீரை நெருங்கியபோது, அவன் தலையையும் அதே பாணியில் கொய்தார் ராஜா தாஹீர். அவனது உடல் மட்டும், குதிரையின் மீதே நீண்ட நேரம் அமர்ந்திருந்தது. வெற்றி ராஜா தாஹிருக்கு மிக அருகில் வந்தது.அரபு வீரர்கள் பலர், போர்க்களத்தில் இருந்து ஓட ஆரம்பித்தனர். நிலையை உணர்ந்த தளபதி முகமது பின் காசிமும், மிகுந்த சோர்வில் இருந்தார். குடிக்க தண்ணீர் கேட்க, படை வீரர்கள் அளித்தனர். அதனை குடித்து விட்டு, சிதறி ஓடிய வீரர்களை திரட்டி மீண்டும் வீர உரை நிகழ்த்தினார். கோழைகளுக்கு வரலாற்றில் இடம் இல்லை, வெற்றி அல்லது வீர மரணம் என முழங்கினார். முகமது பின் காசிமின் உரையால் புது உத்வேகம் பெற்ற அரபு வீரர்கள் மீண்டும், தீவிரமாக போரில் குதித்தனர்.அப்போது, ஒரு அரபுக் குழு, எரியும் வில் அம்புகளுடன், ராஜா தாஹீரை நெருங்கி, அம்பை எய்தது. அந்த எரியும் அம்பு, அவரது யானையின் தந்தத்தை பதம் பார்த்தது. இதனால் மிரண்டுபோன யானை, ஆற்றுக்குள் இறங்கியது. நொடிப்பொழுதில், தாஹிரை, சூழ்ந்து கொண்ட, முஸ்லீம் வீரர்கள், அம்பு மழை பொழிய, மண்ணில் வீழ்ந்தார், ராஜா தாஹிர். இதனையறிந்த அவரது படை சிதறி ஓட ஆரம்பித்தது.தோல்வியின் விளிம்புக்கே சென்ற, முகமது பின் காசீம், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிக் கனியைப் பறித்து, வரலாற்றில் இடம் பிடித்தார். போரில் தோற்ற ராஜா தாஹிரின் தலை கொய்யப்பட்டு, கலீபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.முதலில் அர்பன்பேலா என்ற இடத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, கராச்சியில் வெற்றி பெற்ற காசிம், நேருன் நகரில் தான் தாகீரை கொன்றதாக குறிப்பிடப்படுகின்றது. பிறகு பிராமணபாத் நகரத்தையும், சக்கர், மூல்தான் நகரங்களை வென்று சிந்துவில் முதல் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார் முகமது பின் காசீம்.
சாதிய அடக்குமுறைகளுக்கு கடும் தடைகளை விதித்தார். இதனால் பல ஜாட் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர். இந்து மக்கள் மதம் மாற்றப்பட்டதாகவும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது, எத்தகைய கட்டுக் கதை என்பதை, அந்த காலக்கட்டத்தை கூர்ந்து கவனித்தாலே தெரியும். காரணம் அந்த பகுதியில் பெரும்பான்மை மதமாக அப்போது இந்து மதம் இல்லை. புத்த மதம் தான் பெரும்பான்மை மதம். எனினும் பிற மதத்தவரின் நிலம் பறிக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். முகமது பின் காசிம்.அதுமட்டுமல்ல, சிறு குற்றங்களுக்கு கூட குற்றவாளியை குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்துவதும், எண்ணெய் கொப்பறையில் வீசுவதும் போன்ற தண்டனைகள் பிராமண ஆட்சியாளர்களால் கீழ்சாதியாக கருதப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அதே நேரம் உயர் குடியினருக்கு மிதமான தண்டனைகளே வழங்கப்பட்டன. இந்த பாரபட்சங்களை முஸ்லீம் ஆட்சி ஒழித்துக் கட்டியது. பொது சிவில் சட்டம் பற்றி இன்று அதிகம் பேசுகின்றனர். ஆனால் முதன்முதலில் பொது கிரிமினல் சட்டம் அப்போது தான் நிறைவேற்றப்பட்டது என கூறலாம்.முஸ்லீம்கள், ஜகாத், சதக்கா போன்ற வரிகளை செலுத்தினர். இது அவர்களது ஆண்டு வருமானத்தில் 2 அரை சதவீதம் இருந்தது. ஆனால் பிற மதத்தினர் ஜிசியா என்ற பெயரில் வருடம் 5 தினார் மட்டும் வரி செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது.ஜோதிடம், சகுனம் பார்த்தல், செய்வினை செய்தல் போன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் உயர்சாதி ஜோதிடர்கள் ரகசிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். இது ஒரு தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அவர்கள் முகமது பின் காசிமுக்கு அப்போதே சிலை வைத்து, கவுரவித்தனர்.இவர் ஆட்சி செய்த சிந்துவின் அப்போதைய பகுதி, இப்போதுல்லா பாகிஸ்தானை விட சற்று பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பண்டைய இந்துஸ்தானத்தின் மீது அரேபியரின் கவனம் திரும்ப, மன்னர் தாஹீரின் கவனக்குறைவான நடவடிக்கைகளே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் ஒரு வேலை இந்தியாவின் வரலாறு கூட சற்று வேறு மாதிரியாக அமைந்திருக்கலாம்.
முகமது காசிமின் வெற்றி மாபெரும் வரலாற்று ஆச்சர்யம் மட்டுமல்ல அதிசயமும் கூட. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், சிந்துவில் நிலவிய சாதிய வன்கொடுமைகள் தான் என்பதை பொதுவுடைமை தத்துவஞானி காரல்மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். வரலாற்றாசிரியர் கோ. தங்கவேலு, தனது இந்திய வரலாறு நூலில் குறிப்பிடும் போது, பார்ப்பன அரசனான தாகிர், வருணாசிரம கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்தான். புத்த மதத்தினரும், ஜாட் மற்றும் மேட் பழங்குடியினருமே பெரும்பான்மையாக வசித்த நிலையில், அவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்படாததுடன், பல உரிமைகள் பறிக்கப்பட்டன. மேலும் ஜாட், மற்றும் மெட் எனப்படும் மீனவ சாதியினர்களை அடக்கிவைத்த ராஜா தாஹீர், அவர்களுக்கு தலைப்பாகை அணியும் உரிமை, குதிரைகளில் செல்லும் உரிமைகளை பறித்து, சூத்திரர்கள் என அறிவித்தார். இது அவர்களுக்குள் நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்தது. தாஹிரின் பிராமண குலத்தவர்களும், சில சத்திரிய வகுப்பினரும், சிறுபான்மையினராக இருந்தனர். ஆனால் அவர்கள் பெரும்பான்மை சமூகங்களை அடக்கி ஆண்டு வந்துள்ளனர்.
இதனால் முகமது பின் காசீமுக்கு ஜாட் மற்றும் மெட் இன மக்கள் ஆதரவு கரம் நீட்டினர். அவரது படையுடன் சேர்ந்து கொண்டனர். இது மட்டுமின்றி முஸ்லீம்களின் படையில், ஆப்ரிக்கர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள் என பல இனத்தினர் இருந்தனர். அவர்களின் ராணுவம் பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தது. அதே நேரம் அரபு படைத்தலைவர்கள் சிலரிடம் பழமையான ஆதிக்க குணங்கள் சில இருந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரம் முகமது பின் காசிம் மிகச்சிறந்த வீரராகும், தலைமைக்கு கட்டுப்படுபவராகவும் இருந்தார். எந்தளவுக்கு என்றால், ஆச்சர்யம் தான்.
ராஜா தாஹிருக்கு 2 மகள்கள் இருந்தனர். ஒருவர் சூரியா தேவி. மற்றொருவர் பார்மல் தேவி. இவர்கள் இருவரையும் கலீபாவிடம் அனுப்பி வைத்தார் முகமது பின் காசிம். அப்போது, சூரியா தேவியின் அழகில் ஈர்க்கப்பட்டார் கலீபா அல் வலீத். எனவே சூரியா தேவியை விடுதலை செய்வதோடு, மனைவியாக்கிக் கொள்ள விரும்புவதாக அரசவையிலேயே முன்மொழிந்தார்.ஆனால் தங்கள் இரு சகோதரிகளையும், 3 நாட்கள் இரவு தன்னுடன் வைத்து, தங்களை முகமது பின் காசிம் பலாத்காரம் செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலீபா தன் கையாலேயே ஒரு உத்தரவை எழுதினார். அந்த கடிதத்தில் தோல் பையால் சுற்றப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகமது பின் காசீமை, குதிரை வண்டியின் டிரங்கில் அடைத்து கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவு முகமது பின் காசீமை சென்றடைந்த உடன், தனக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகளை அழைத்து, உத்தரவை நிறைவேற்றுமாறு கண்டிப்புதன் தெரிவித்தார். அவர்களும் அதுபோன்ற அவரை கட்டி வண்டியின் பின் பகுதியில் மூட்டை போல் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார் முகமது பின் காசிம்.
அவரது உடல் மட்டுமே அரசவையை அடைந்தது. இதனை கண்ட கலீபா, சூர்யா தேவியை அழைத்து, எனது உத்தரவுக்கு, என் தளபதி கட்டுப்பட்ட விதத்தை பாருங்கள் எனத் தெரிவித்தார். இதனை கண்டு ஆச்சர்யமடைந்த சூர்யா தேவி, முகமது பின் காசிம், எங்கள் இருவரையும் சகோதரி போல, தாய் போலவே நடத்தினார். அவரிடம் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். இருந்தாலும் என் தந்தை, என் சகோதரர்களை கொன்று, எங்கள் ராஜியங்களை அவர் அழித்ததற்கு பழிவாங்கவே நாங்கள் அவர் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தினோம் என்று கூறியுள்ளனர். இந்த நிகழ்வுகள் சச்நாமா என்ற பெயரில் இச்சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் பாரசீக மொழியில் எழுத்தப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.






Leave a Reply