கஜினி முகமது மத வெறியராகவும் சோமநாதபுரம் ஆலயத்தை தாக்கியதாகவும் இன்றும் பெரும்பாலனவர்களால் நம்பப்பட்டு வரும் நிலையில், அதே கஜினி முகமது, தனது தலைநகரான கஜியினில் மாளிகை கட்டி வசித்து வந்த இந்து வணிகர்களை எதுவும் செய்யவில்லை என்பதோடு, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்தார் என்ற வரலாற்று உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் காலத்திற்கு முன்பே, தமிழகம், கேரள கடற்கரைகளில் அரபு வணிகர்கள் வியாபாரம் செய்த குறிப்புகள் வரலாற்றில் உண்டு. அதே போன்ற வரலாறு கொண்ட மற்றொரு பகுதி தான் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான சோமநாதபுரம்.
இப்பகுதி அரபு, சீன வர்த்தகர்களின் வருகையால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக செழிப்புடன் இருந்து வந்த பகுதி. எனவே இங்கு மத ரீதியான வெறுப்புகளை விட, வியாபார லாப நோக்கமே மேலோங்கி இருந்தது. சோமநாதபுரம் படையெடுப்புக்கு முன்பு தஜிகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் ஆளுநர்கள், இந்து மன்னர்களின் பிரதிநியாக பணியாற்றியிருக்கின்றனர். அதே போல் இஸ்லாமியர்களின் வசம் இருந்த கஜினியில் இந்து வணிகர்கள் பெரும் பெரும் மாளிகைகளை கட்டி, வர்த்தகத்தில் தலைத்தோங்கி இருக்கின்றனர்.
ஒரு முறை இஸ்மாயிலி போரா என்ற பிரிவினர், இந்து கோவில் ஒன்றை தாக்கியதாக கஜினியிடம் இந்துத் தலைவர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து இஸ்மாயிலி போரா பிரிவினரின் வழிபாட்டுத் தலத்தை தகர்த்து பதிலடி கொடுத்துள்ளான் முகமது கஜினி. எனவே முகமது கஜினி தன்னை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மதங்களை தாண்டி ஆதரித்துள்ளான் என்பது தெளிவாகத் தெரிகிறது.






Leave a Reply