பிராமண புரோகிதர்களின் தவறான வழிகாட்டுதலால் தான் சோமநாதபுரம் ஆலயம் தாக்கப்பட்டதாக தயானந்த சரஸ்வதி சாமிகள் தனது சத்தியார்த்தி பிரகாஷ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.பிராமண புரோகிதர்கள் இந்து மன்னர்களிடம் போர் செய்ய வேண்டாம், மகாதேவ், மிலேச்சர்களை துவம்சம் செய்து விடுவார் என கதை விட்டிருந்தனர்.இதனால் இந்து மன்னர்கள் போருக்கு முன்வரவில்லை. எதிரிகளை கடவுள் அழித்து விடுவார் அல்லது அவர்களின் கண்கள் குருடாகிவிடும் என கூறி இந்து மன்னர்களை நம்ப வைத்தனர். பின்னர் கஜினியின் படைகள் நகரத்தை நெருங்கி, எதிர்ப்புகள் இல்லாமல் இருந்தது கண்டு, இந்துப் படைகளை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.
இதுவே சோமநாதபுரம் ஆலயம் அழிக்கப்பட்டதற்கு காரணம். அந்த ஆலயத்தில் காந்த சக்தியால், சிவலிங்கம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. இது தனது சக்கியால் மிதந்து வருவதாக பிரமாண புரோகிதர்கள் மக்களை நம்ப வைத்திருந்தனர். ஆலயத்தின் மேல்தளத்தை இடித்த உடன் காந்த விசையின் ஆதரவை இழந்த லிங்கம் கீழே விழுந்தது
இது சோமநாதபுரம் ஆலய படையெடுப்பு பற்றி தயானந்த சரஸ்வதி சாமிகள் தனது உண்மையின் வெளிச்சம் அதாவது சத்யார்த்தி பிரகாஷ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.






Leave a Reply