ஈரான் விமானப்படை அதிகாரிகள் மத்தியில் அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி உரை நிகழ்த்தினார். அமெரிக்கர்கள் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, உலகின் வரைபடங்களை மாற்றி வருகின்றனர். இது உண்மையில் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நடைமுறைக்கு வராது. அவர்களால் அதனை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அமெரிக்க அதிபரின் முடிவையே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.தொடர்ந்து பேசிய கொமேனி, நம்மைப்பற்றி அவர்கள் அறிக்கையில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நம்மை அச்சுறுத்தி வருகிறார்கள். நாமும் அதே பாணியில் அறிக்கை வெளியிடுவோம். அச்சுறுத்துவோம். நம்மை தாக்க நினைத்தால், நாமும் அதைவிட பலமாக திருப்பித் தாக்குவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, முதன் முறையாக ஈரானின் சுப்ரீம் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திட்டவட்டமாக அறிவித்த கொமேனி


Leave a Reply