சவுதி அரேபியாவிடம் நிறைய நிலம் உள்ளது. அங்கு வேண்டுமானால், தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்கலாம் என போர்க்குற்றவாளியும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு திமிர் பேச்சு பேசியுள்ளார்.அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுதி அரேபியாவுடன் உறவை சுமூகப்படுத்தும் ஒப்பந்தம் நிறைவேறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.அதே நேரம் ஒரு போதும், தனி பாலஸ்தீன நாட்டை அனுமதிக்க முடியாது. காசா என்ற பாலஸ்தீன நாடு உருவானால், அதனை ஹமாஸ் ஆட்சி செய்தால், இஸ்ரேலின் நிலை என்னாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிட்லருக்கு பிறகு, யூதர்களை பெரிய அளவில் ஹமாஸ் ஹோலோகேஸ்ட் செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சவுதி அரேபியா விரும்பினால், அதனிடம் நிலம் அதிகம் இருப்பதால், அங்கு தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக் கொள்ளலாம் என விசித்திர திட்டத்தை நெதன்யாகு முன்மொழிந்துள்ளார்.இஸ்ரேலுடன் சுமூக உறவு மேற்கொள்ள வேண்டும் என்றால், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என சவுதி அரேபியா தொடர்ந்து நிபந்தனை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply