மத்திய இஸ்ரேலின் தெற்கு ஹைபாவில் உள்ள கோலானி ராணுவபாசறையை குறிவைத்து, ஹிஸ்புல்லா அனுப்பிய ஆள் இல்லா விமானம் இலக்கை துல்லியமாக தாக்கியதால் இஸ்ரேலில் மாபெரும் பதற்றம் வெடித்துள்ளது.ராணுவத்தினரின் டைனிங் ஹாலில், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஆள் இல்லா விமானம் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், 67 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என தெரிகிறது.காயம் அடைந்த சுமார் 40 பேர் ஷீபா மற்றும் ரம்பம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..மேலும் சிலரை கிலால் எஃபே மருத்துவமனைக்கும், ஈமாக் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.ஈமாக் மெடிக்கல் சென்டர், இதை மிகப்பெரிய பாதிப்பாக அறிவித்திருக்கிறது.பாதிக்கப்பட்டவர்களை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதிக்கு விரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா நடத்திய இந்த துல்லியமான தாக்குதலை அந்தப் பகுதியில் இருந்த எந்த ஒரு சைலன்சரும் கணிக்கவில்லை என்ற செய்தி தற்பொழுது வெளியாகியிருக்கிறது.திடீரென வெடிப்பு சத்தம் ஏற்பட்டதாகவும் எந்த ஒரு எச்சரிக்கை அலாரமும் ஒலிக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறி இருக்கின்றனர்.முன்னதாக ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்ததாக இஸ்ரேல் கூறி இருந்தது. இந்நிலையில், புதிய சம்பவத்தில் 70 காயம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் ஒரே நாளில் இஸ்ரேல் சந்தித்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.






Leave a Reply