அலாவுதீன் கில்ஜியை மதவெறி பிடித்த முஸ்லீம் மன்னர் என ஒரு புறமும், ஒழுங்கக் கெட்ட முஸ்லீம் மன்னர் என மறுபுறமும், வரலாறு என்ற பெயரில் அவதூறு நெருப்பை பற்ற வைக்கின்றனர். உண்மையில் அலாவுதீன் கில்ஜி, இஸ்லாத்தை எப்படி பார்த்தார், அதனை பின்பற்றினாரா என்பதை அறிந்தால், ஆச்சர்யம், சுவாரஸ்யம் அதிகரிக்கும். உண்மையில் அலாவூதீன் கில்ஜி யதார்த்த மனிதராக வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு விசுவாசமாக இருந்த, தனது சகோதரர் உளுகான், தளபதிகள் ஜாபர்கான், நுஷ்ரத் கான், ஆல்ப் கான் ஆகியோரை 4 கலீபாக்களாக நியமித்து, தனி மதத்தை உருவாக்கவும் திட்டமிட்டார்.ஆனால் அவரை தொடர்ந்து இஸ்லாமிய நெறிகளை பின்பற்றச் செய்ததில், மவுலானா காஜி முகிஸ் உத்தீன் என்ற மார்க்க அறிஞரின் பங்கு முக்கியமானது. ஒரு முறை காஜியிடம் அலாவுதீன் கில்ஜி இப்படிச் சொன்னார், மவுலானா முகிஸ் அவர்களே, நான் பெரிய அளவில் படித்திருக்கவில்லை, ஆனால் நான் முஸ்லீமாக பிறந்துள்ளேன், எனது முன்னோர்களும் முஸ்லீம்கள். கலகங்கள் ஏற்படும் போது, பல உயிர்கள் அழிகின்றன. இக்கால மக்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக இருக்கிறார்கள்.
எனக்கு கீழ்படிந்து நடப்பதில்லை. அதற்காக வேண்டி அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்க வேண்டி இருக்கிறது. எது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது என நினைக்கின்றேனோ அதனை கட்டளையிடுகின்றேன். எனது கட்டளை இஸ்லாத்திற்கு ஆதரவானதா, அல்லது எதிரானதா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இவ்வாறு பேசியுள்ளார். இந்த உரையில் இருந்தே அலாவுதீன் கில்ஜி இஸ்லாமிய மார்க்கத்தை எந்த அளவுகோலில் பின்பற்றி இருந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம். சுருக்கச் சொல்வதாக இருந்தால், சராசரி இஸ்லாமியராக இருந்தார். கடும்போக்கு, மதவாதப்போக்கு கொண்டவராக இருந்திருந்தால், வரலாறு வேறு மாதிரியாக மாறி இருக்கும்.






Leave a Reply