அடில் ஷாஹி வம்சத்தின் முன்னாள் தலைநகரான விஜயபுராவில் உள்ள 43 நினைவுச்சின்னங்கள் 2005 இல் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்டன.
கர்நாடகா வக்ஃப் வாரியம், விஜயபுராவில் உள்ள சின்னமான கோல் கும்பாஸ், இப்ராஹிம் ரௌசா மற்றும் பாரா கமான், பிதார் மற்றும் கலபுராகியில் உள்ள கோட்டைகள் உட்பட மாநிலம் முழுவதும் குறைந்தது 53 வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு உரிமை கோரியுள்ளது.
ஹம்பி வட்டத்தில் ஆறு, பெங்களூரு வட்டத்தில் நான்கு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மஸ்ஜித்-இ-ஆலா உள்ளிட்ட இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மீதும் வக்பு வாரியம் உரிமை கோரியுள்ளது.
தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கோரிக்கை மூலம் பெறப்பட்ட தகவலின்படி, வக்ஃப் வாரியம் விஜயப்பூரில் உள்ள 43 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை வக்ஃப் சொத்துகளாக 2005 இல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அப்போதைய துணை ஆணையரும் மாவட்ட வக்ஃப் வாரியத் தலைவருமான முகமது மொஹ்சின் செய்துள்ளார்.
இதனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களின் சொத்துரிமை யாருடையைது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இருப்பினும், மாநில அரசு மற்றும் ASI வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வக்ஃபு நிலக் கோரிக்கை தொடர்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply