பள்ளிக்கூட வரலாற்று பாடப் புத்தகத்தில் நாம் படித்த பிருத்விராஜ் – சம்யுக்தை காதல் கதை உண்மையா?

பிருத்விராஜன் என்றாலே, ஜெயச்சந்திரனின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஜெயச்சந்திரனுக்கு எதிரியானன் என்பதாக பள்ளிக்கூட வரலாற்று பாட நூல்களில் கூட எழுதப்பட்டுள்ளது. பிருத்விராஜ் ரசோ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் சமகால வரலாற்று நூட்கள் எதிலும் இல்லை. எனவே இந்தக் காதல் தான் இரு மன்னர்களுக்கும் இடைய பகை மூல காரணம் என்பதே கட்டுக்கதை.பிருத்விராஜ் சவுகான் பற்றி 3 இலக்கியங்கள் பேசுகின்றன. இந்த இலக்கியங்களை பல தரப்பினரும் தற்போதும் நம்பி வருகின்றனர். அதில் முக்கியமானது பிருத்விராஜ் ரசோ.இது பெரும்பாலும் கட்டுக்கதைகளை உள்ளடக்கிய இலக்கியம்.

அடுத்ததாக பிருத்விராஜ் விஜயா. ஹம்மிரா மஹா காவியா. இதுபோன்ற காவியங்களில் கிடைக்கும் சில தகவல்கள் நம்பும்படியாகவும், சில கட்டுக்கதைகளாவும் உள்ளன. எனவே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களுடன் சேர்ந்து, இந்த காவியங்களை அணுக வேண்டியுள்ளது.பிருத்விராஜ் விஜயா நூலில் கங்கை கரையில் வாழ்ந்த ஒரு மங்கையை பிருத்விராஜன் காதலித்தான் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அது ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தை என கூறப்படவில்லை. விஜயா நூலில் உள்ள குறிப்புகளைத் தழுவி, கூடுதல் கதையுடன் ரசோவில் எழுதப்பட்டிருக்கலாம்.