வரலாற்று அவதூறுகள் துப்பாக்கியை விட மிக மோசமான ஆயுதங்கள் ஆகும். பண்டைய முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஆன்மீக வாதிகள் மீதான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது நிச்சயம் தடுக்கப்படவேண்டும். அதில் ஒன்று தான் ராணி சம்யுக்தை பற்றிய கதைகள்.டெல்லியின் கடைசி ராஜபுத்திர மன்னன் பிருத்விராஜ் சவுகானின் மனைவி சம்யுக்தையையும், முஸ்லீம் ஆட்சியாளர்களான முகமது கோரி, குத்புதீன் ஐபக், ஆன்மீகத் தலைவர் ஞானி அஜ்மீர் ஹாஜா முகைதீன் சிஸ்தியையும் தொடர்பு படுத்தி பல அவதூறுகள், விக்கிபீடியாவிலும், க்வாரா இணையதளத்திலும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானார் படித்து, அறிவை மாசுபடுத்திக் கொள்கின்றனர்.அந்தக் கட்டுக்கதைகளை பார்க்கலாம். பிருத்விராஜ் சவுகானின் மனைவி சம்யுக்தை முகமது கோரியால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் அஜ்மீர் காஜா முகைதீன் சிஸ்தியால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும், இருவராலும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் பல வதந்தி கிளப்பிவிடப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் மத பதற்றத்தை கொளுந்து விட்டு எரியச் செய்வதற்கு இதுபோன்ற வதந்திகள் முக்கிய காரணமாக உள்ளது. இதுவெல்லாம் உண்மையா என்பதை பார்க்கலாம்.
கட்டுக்கதை 1 முகமது கோரி போரில் தோற்ற, பிருத்விராஜ் சவுகானின் ஆண் உறுப்பின் நுணித் தோலை வெட்டி, விருத்த சேதனம் செய்தான். பிறகு அவன் கண் முன்னாலேயே ராணி சம்யுக்தையை கோரி கர்ப்பழித்தான்.
கட்டுக்கதை 2 ஒரு கூடாரத்தில் வைத்து, பிருத்விராஜனை கோரி முகமது கொலை செய்தான். அந்த கூடாரத்தில் வைத்தே ராணி சம்யுக்தையை கர்ப்பழித்தான். கட்டுக்கதை 3 ராணி சம்யுக்தையை போர்க்களத்தில் வைத்து, ராஜபுத்திர வீரர்கள் முன்னிலையில், முகமது கோரி, அவனது தளபதி குத்புதீன் ஐபக், ஆன்மீகவாதி அஜ்மீர் முகைனுதீன் சிஸ்தி ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.கட்டுக்கதை 4 ராம்ராஜ் பிருத்விராஜ் படத்தில் காட்டப்படுவது போன்று, பிருத்விராஜை, கோரி முகமது கடத்திச் சென்று, கண்ணை கட்டி, அம்பு வீசச் சொன்னபோது, சரியாக அம்புவீசி கோரியை பிருத்விராஜ் கொலை செய்தான். இதனைத் தொடர்ந்து, பிருத்விராஜும் கொல்லப்பட்டான். அவனது மனைவிகள் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இப்படி பலதரப்பட்ட கட்டுக்கதைகள் வட இந்தியாவில் பல நூல்களிலும், பல இடங்களில் உலா வருகின்றன. இதுபோன்ற கட்டுக்கதைகள் தான் வட இந்தியாவில் தொடர்ந்து, மதவெறி எனும் தீயை அணையாமல் பாதுகாக்கின்றன. உண்மை என்ன என்று பார்க்கலாம்.
இந்தக் கட்டுக்கதைகளுக்கு மூல காரணம் ஸ்டான்லி லேன் பூலே என்ற ஆங்கில எழுத்தாளன் தான். தொடர்ந்து இந்து முஸ்லீம் மதவெறி தீ அணையாமல் இருக்க இவன் எழுதிய கட்டுக்கதைகள் தான் இவை. உண்மையை பார்க்கலாம்.
பிருத்விராஜ் பிடிபட்ட பிறகு, அஜ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனக்கு கட்டுப்பட்ட அரசனாக மீண்டும் பதவி ஏற்றுக் கொள்ளுமாறு கோரி கேட்க, அதனை மறுத்து புரட்சி செய்ததால், பிருத்விராஜ் கொல்லப்பட்டதாக சக கால வரலாற்றாசிரியர் ஹசன் நிசாமி குறிப்பிடுகிறார்.பிரபந்த சிந்தாமணி என்ற சமண நூல் இப்படி குறிப்பிடுகிறது. பிருத்விராஜனை அஜ்மீருக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பதவி ஏற்றுக் கொள்ளுமாறு, கோரி கூறியுள்ளார். இதனிடையே முஸ்லீம்களை பன்றிகள் கொல்வது போன்ற ஓவியம் ஒன்று அரண்மனையில் இருந்ததால், அதனை பார்த்த கோரி, பிருத்விராஜனை கொன்றதாக கூறுகிறது.ஹம்மியா மகா காவியா என்ற இன்னொரு சமண நூல் இப்படி குறிப்பிடுகிறது.பிரத்விராஜன் கைது செய்யப்பட்ட பிறகு சாப்பிடாமல் இருந்தார். அவரை விடுதலை செய்யுமாறு, கோரியின் ஆலோசகர் ஒருவர் கூற, கோரி அதனை ஏற்க மறுத்தார். இதனிடையே சிறையிலேயே பிருத்விராஜ் உயிரிழந்தார் என குறிப்பிடுகிறது.பிருத்விராஜின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் கோவிந்த ராஜாவை, தனக்கு கட்டுப்பட்ட அரசானாக கோரி நியமித்தார். இதனை உறுதி செய்யும் வகையில், பிருத்விராஜன் மற்றும் முகமது பின் ஷாம் என்ற இரு பெயர்கள் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிருத்விராஜனின் வாரிசை கோரி அடுத்த அரசனாக நியமித்தது தெளிவாகிறது.இதில் கேள்விகள் என்னவென்றால், பிருத்வி ராஜனையும், அவரது மகனையும் மீண்டும் அரசனாக்க நினைத்த, கோரி முகமது ஏன் ராணி சம்யுக்தையை மானப்பங்கபடுத்த வேண்டும்.
ராணி சம்யுக்தை தானாக தீக்குளித்து உயிரிழந்தார். இது அக்கால ராஜபுத்திர அரசிகளிடம் இருந்த பழமையான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.மங்கோலிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம் ஆட்சியாளர்களாக இருந்தாலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை அந்த பகுதியின் முன்னாள் ஆட்சியாளர்களிடமே ஒப்படைத்து விட்டு, வரி வருவாயை பெறுவதையே அதிகம் விரும்பினர். காரணம் மக்களை கட்டுப்படுத்த அவர்களே சிறந்தவர்கள். அப்படி இருக்கும் போது, மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் கோரி முகமதுவும், அவரது தளபதிகளும் செயல்பட்டார்கள் என பரப்புவது, அரசியல் ஆதாயத்திற்காகவே என்பது தெளிவாகிறது.






Leave a Reply