இந்திய தேசியத்தை ஆதரிக்கும் யாரும், முதலில் கொண்டாட வேண்டிய ஆளுமை அலாவுதீன் கில்ஜி. இவன் காலத்தில் இந்துஸ்தான் உலக ராணுவ வல்லரசுகளில் ஒன்றாக இருந்தது. பொருளாதாரத்தில் இன்றைய அமெரிக்காவை விஞ்சி இருந்தது. கட்டுக் கோப்பில் இன்றைய சீனாவை விஞ்சி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நபரைத் தான், குறுகிய மதக் கண்ணோட்டத்தோடு, கொடூர அரக்கனமாக சித்தரித்துள்ளனர், நவீன இந்திய தேசியவாதிகள். அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றை ஒவ்வொரு பாகமாக பார்க்கலாம்.முதலில் அலாவுதீன் கில்ஜியின் தோற்றம் பற்றி பார்க்கலாம்.இந்துஸ்தான் முழுவதையும் ஆளத் துடித்த பல பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தாலும், நாட்டை காக்க தேவையான பண்புகள் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. குறிப்பாக வீரமிக்க ராஜபுத்திர மன்னர்கள், தங்களுக்குள் அடித்துக் கொண்டு, ஒற்றுமையின்றியும், சுயநலத்துடனுடன் வாழ்ந்து வந்தனர். சில போலி புரோகிதர்களின் கைப்பாவையாக இருந்தனர். மூட நம்பிக்கைகளின் தொட்டிலாக இருந்தது அவர்களின் சில அரண்மனைகள். அதே நேரம் சில ராஜபுத்திர மன்னர்களிடம் பல உயர் பண்புகள் இருந்தன.
ஆனாலும் உலகப் பேரரசை உருவாக்க பல கூடுதல் தகுதிகள் அவர்களுக்கு தேவைப்பட்டன. அந்த தகுதிகளை விட கூடுதலாகவே, வீரம், அரசியல் ஞானம், விடா முயற்சி, மனம் தளராமை உள்ளிட்ட பல பண்புகளை பெற்றிருந்தார் எஃகு நெஞ்சம் படைத்த அலாவுதீன் கில்ஜி.அலாவுதீன் கில்ஜியின் காலம் கிபி 1296 முதல் 1316 வரை. கில்ஜி வம்சத்தின் முதல் பேரரசரான ஜாலாலுதீன் கில்ஜியின் அண்ணன் மகன் தான் அலாவுதீன் கில்ஜி. 64 துருக்கிய மரபு இனங்களில் கில்ஜிகளும் அடக்கம். அதிக காலம் ஆப்கன் பகுதியில் வசித்ததால், இவர்களிடம் ஆப்கான் கலாச்சாரமும் கலந்திருக்கும். அலாவுதீன் கில்ஜி பிறந்தது, வளர்ந்தது, இறந்தது எல்லாமே டெல்லியிலும் இந்திய துணைக் கண்டத்திலும் தான். எனவே இவரை படையெடுத்து வந்த அந்நியர் என கூற இயலாது. அதற்கு இன்னொரு காரணம், இந்துஸ்தானத்துக்கும், முஸ்லீம் உலகத்திற்குமான தொடர்பு அப்போது மிகக்குறைவாகவே இருந்தது, காரணம், இடைப்பட்ட பகுதிகள் மங்கோலியர்களின் ஆட்சியில் இருந்தன.முதன்முதலில் இந்துஸ்தானத்தின் பெரும்பகுதியை ஆண்ட முஸ்லீம் மாமன்னர் என்றால் அது அலாவுதீன் கில்ஜி தான். இந்துஸ்தானத்தை உலகின் தலைசிறந்த, வலிமைமிக்க உலகப் பேரரசாக மாற்றவே பாடுபட்டார் அலாவுதீன் கில்ஜி.இந்துஸ்தானம் என்பதும் இந்தியா என்பதும் ஒன்றல்ல… இதற்கு இடையே வேறுபாடுகள் பல உண்டு இங்கு இந்துஸ்தானம் என்பது, சிந்து கங்கை சமவெளிப்பகுதிகளை மட்டுமே குறிக்கும்.
இப்போதைய தென் இந்தியா அப்போதைய இந்துஸ்தானத்தின் பகுதியாக இருக்கவில்லை. எனவே இந்தியா என்பது, இந்துஸ்தானத்தின் நிலப்பகுதியில் இருந்து பெரிய அளவில் வேறுபட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதே நேரம் இப்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகள் கில்ஜியின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் கர்நாடக, ஆந்திரா, தமிழகத்தின் பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளும் கில்ஜியின் வசம் வந்தன. எனவே இந்துத்துவ வலதுசாரிகள் கூறும் அகண்ட பாரதம் என்பதை உண்மையிலேயே அமைத்துக் காட்டியது அலாவுதீன் கில்ஜி தான். அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பது, மங்கோலிய – இந்துஸ்தான் போர்கள் தான். இந்த போர்களில் மங்கோலியர்களை 12 முறை புறமுதுகிட்டு ஓடச் செய்தவன் அலாவுதீன் கில்ஜி. அந்த காலக்கட்டத்தில் டெல்லியை பலவீனமான ஒரு ஆட்சியாளன் ஆண்டிருந்தால், மங்கோலியர்களின் ஆட்சி வரைபடத்தில், இந்துஸ்தானமும் இடம்பெற்றிருக்கும்.மங்கோலியர்களை மண்டியிடச் செய்த மாவீரன் அலாவுதீன் கில்ஜி. இப்படி ஒரு அரசன் அந்த காலக்கட்டத்தில் இல்லாமல் இருந்திருந்தால், எத்தனை ஆயிரம் இந்துஸ்தானின் இன்னுயிர்கள் மங்கோலிய வாட்களுக்கு இறையாகி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.






Leave a Reply