இந்தியா மீது படையெடுத்த அந்நியர்கள் என்ற வரிசையில் தாக்கப்படும் மன்னர்களில் முகமது கோரியும் ஒருவர். இவர் மத ரீதியாக நாடுகளைக் கைப்பற்றினாரா, இல்லை நாடாளும் ஆசையில் கைப்பற்றினாரா என்பதை இவரது ஆரம்ப கால வரலாற்றை படித்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.ஆப்கனில் உள்ள கோரியில் பிறந்த இவரது இயற் பெயர் முகம்மது மட்டுமே. கோரியில் பிறந்ததால் முகமது கோரிஆனார்.கோரியின் குழந்தை பருவப் பெயர் சகாபுதீன். முகமது கோரியின் பேரரசு வட இந்தியா, பாகிஸ்தான், ஈரான், வங்கதேசம், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மேனிஸ்தான் என மத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் பரவிக் கிடந்தது.
இந்துத்துவா தேசியவாதிகள் அடையத் துடிக்கும் அகண்ட பாரதத்தை அன்றே அமைத்தவன் தான் கோரி முகமது. 1149ஆம் ஆண்டு இவன் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.கோரியின் சொந்த மாமாவின் பெயர் பக்கர் அல் தீன் மசூத். இவர் கோரிக்கு எதிராக செயல்பட திட்டமிட்டார். அப்போதைய முஸ்லீம் பேரரசுகளில் ஒன்றான செல்யூக் அரச குடும்பத்தின் ஹெராட் பகுதி ஆளுநரிடம் உதவி கேட்டார். உதவியும் கிடைத்தது. இதனை வைத்து, தனது மருமகன் கோரிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
விசயத்தை அறிந்த கோரி மற்றும் அவரது சகோதரர் கியாத் அல் தீன் முகமது ஆகியோர் தனது சொந்த மாமாவை வீழ்த்தி வெற்றி கண்டனர். செல்யூக் பேரரசின் முஸ்லீம் ஆளுநருக்கு மரண தண்டனை வழங்கினர். சமிந்தாவர், உரோஷ்கான், பத்கிஸ், கர்ஜிஸ்தான் பகுதிகளை கோரி வென்றார்.
உதுமானிய பேரரசை உருவாக்கிய காயி இஸ்லாமிய பழங்குடியினரின் மூல வம்சம் தான் ஓகஸ் டர்க். 1173ஆம் ஆண்டு இவர்கள் வசம் தான் கஜினி இருந்தது. அதன் மீது படையெடுத்த கோரி அதனை கைப்பற்றினார். அதே போல் இஸ்லாமிய செல்யூக் பேரரசு வசம் இருந்த ஆப்கனின் ஹெராட்டை 1175ஆம் ஆண்டு கோரி முகமது கைப்பற்றினார். அதே ஆண்டில் முல்தானையும் கைப்பற்றினார். 1186ஆம் ஆண்டு லாகூரை கைப்பற்றினார்.இப்படி தனது ஆட்சியை ஏற்காத பல முஸ்லீம் ஆட்சியாளர்களை அடுத்தடுத்து வீழ்த்தி அரியணையை தக்க வைத்தவர் தான் முகமது கோரி. அவர் இந்தியாவிற்கு வர வேண்டிய காரணம், மதத்தை பரப்ப அல்ல. அதிகாரத்தை நிலைநிறுத்தத் தான். அவர் டெல்லியை அடைய ராஜஸ்தான் வழியாக வர வேண்டி இருந்தது. அப்படி வந்தவர்களை தடுத்தவர் தான் பிருத்விராஜ் சவுகான் எனும் பிராமண மன்னன். இவரை வைத்துத் தான் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் எடுத்தனர். இவர் ராஜஸ்தானின் சில பகுதிகளையும், டெல்லியின் சில பகுதிகளையும் ஆட்சி செய்து வந்தார்.
எனவே பிருத்விராஜனை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் கோரி முகமது.இங்கு நாம் கவனிக்க வேண்டியது, பிருத்விராஜ் எனும் இந்து மன்னனை தோற்கடிக்கும் முன்பே, தனது தாய் மாமன் உள்ளிட்ட பல முஸ்லீம் ஆட்சியாளர்களை வெட்டி வீழ்த்தி, தனது வெற்றிக் கொடியை நாட்டி விட்டுத் தான் கோரி டெல்லியை அடைய முயல்கிறார்.அவரது இலக்கணம் ஒன்று தான். தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலை துண்டிக்கப்படும். அது முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி. மாமனாக இருந்தாலும் சரி. மாமன்னனாக இருந்தாலும் சரி. தன்னை ஆதரிப்பவர்களுக்கும், இதே இலக்கணம் பொருந்தும்.
இதில் மதம் எங்கு வந்தது என்பதே கேள்வி. ஆனால் இவரது கதையையும் மத ரீதியாக சித்தரித்து திரைப்படம் எடுத்து வைத்துள்ளனர்.






Leave a Reply