பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு…
நடவடிக்கைகளை தொடங்கிய ஜப்பான்…
நெதன்யாகு தரப்பு அதிர்ச்சி…
பாலஸ்தீனத்திற்கான ஜப்பான் தூதர் Yoichi Nakashima வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான சாத்தியம் குறித்து ஜப்பான் ஆய்வு செய்து வருவதாக பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஜப்பானியர்கள் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள்,
பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலையின் காட்சிகள் ஜப்பானியர்களின் இதயங்களைத் நொறுக்குவாதாக, ஜப்பானிய தூதர் Yoichi Nakashima கூறியிருக்கிறார்.
மேலும் நகாஷிமா பாலஸ்தீன தொலைக்காட்சியான Wafaக்கு அளித்த பேட்டியில்”பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் தனி நாடுகளாக இருப்பதைத் தவிர இந்த பிரச்சினைக்கு வேறு எந்த தீர்வும் இல்லை என்றும், இந்த தீர்வை மட்டுமே சர்வதேச சமூகம் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் “பாலஸ்தீனிய மக்களுக்கான ஐ.நா. ஏஜென்சியின் பணிகளையும் அதன் நிவாரண நடவடிக்கைகளையும் எந்த தடையின்றி தொடர்ந்து நடைபெற மற்ற நாடுகளுடன் இணைந்து ஜப்பான் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறி இருக்கின்றார்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா ஏஜென்சி UNRWA-விற்கு ஜப்பான் மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி பாலஸ்தீன நாட்டை இப்போது வழங்கினால், அது ஹமாசின் தாக்குதலுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்து விடும் என்றும், காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் நெதன்யாகு தரப்பு அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஜப்பானின் அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.






Leave a Reply