2 நகரங்கள் துவம்சம்! 30 இஸ்ரேலியர்கள் காயம்!

டெல்அவிவ் உள்ளிட்ட 2 நகரங்களை குறிவைத்த ஹிஸ்புல்லா…

சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்…

இஸ்ரேலின் தலைமை நகரான டெல் அவிவ் புறநகர் பகுதிகளான டிரா மற்றும் ஹசரான் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதில் சிலவற்றை இஸ்ரேல் ஐயன் டோம்கள் தடுத்தாலும், சில ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியுள்ளன.

இதில் டிரா நகரத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். ஹசரானில் 19 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே இது மிகப்பெரும் தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு பாலிஸ்டிக் மிசல்ஸ்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி இருப்பதாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்கள் காரணமாக சில மணி நேரம் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதாள அறைகளுக்கு சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை லெபனானின் பெக்கா பகுதியில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 72 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Posts

40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!