அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது 200 பாலஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதலை ஈரான் நிகழ்த்தியது. இதனால் ஏற்பட்ட சேதாரம் குறித்த தகவலை தற்பொழுது இஸ்ரேலின் சொத்து வரி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு 39 மில்லியன் டாலரில் இருந்து 52 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேதாரம் ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரேலின் சொத்துவரி நிர்வாகம் அறிவித்துள்ளது.அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 3000 கோடியில் இருந்து 4000 கோடி வரை இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரேல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு நாள் சேதாரம் ஆகும். இந்தப் போர் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரே தாக்குதலில் ஏற்பட்ட மிகப்பெரிய சேதாரம் இதுவே என்று கூறப்படுகிறது.டெல்அவிவ்வில் உள்ள Sea and Sun என்ற வணிகக்கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதாரம் அடைந்து இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
உயர்தர வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் இந்த தாக்குதலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும், குறிப்பாக டர்க்கைஸ் ரெஸ்டாரன்ட் மொத்தமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும் சொத்து வரி நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் இதன் அருகில் இருந்த 150 அப்பார்ட்மெண்ட்கள், ஆடம்பர விடுதிகளும் இந்த சேதாரம் அடைந்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.சில உணவகங்களை இனிமேல் திறக்கவே முடியாத சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.ஹாட் ஹஷ்ரான் என்ற பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் அருகே உள்ள 100 அப்பார்ட்மெண்டுகள் சேதாரம் அடைந்திருக்கிறது. இதன் சேத மதிப்பு 2000 கோடி வரை வரும் என்று கூறப்பட்டுள்ளது.ஈரான் நடத்திய தாக்குதல் மட்டுமின்றி லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்தும் பல்வேறு தாக்குதல்களை இஸ்ரேல் சந்திக்கிறது.இந்தப் போரில் இஸ்ரேல் சந்தித்த எல்லா தாக்குதல்களையும் மொத்தமாக கணக்கிட்டால் இஸ்ரேலுக்கு இருபது ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேதாரம் ஆகி இருப்பதாக இஸ்ரேலின் சொத்து வரி நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை கூறுகிறது.






Leave a Reply