கோமாளி சவுதி!

ஈரானுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் சவுதி…
அதே நேரம் இஸ்ரேல் கோபித்துக் கொள்ளாத வகையில் கண்டன அறிக்கை…
மன்னர் ஆட்சியின் கோமாளித்தனங்கள் அம்பலம்..

ஈரான் மீதான தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் பெயரை சவுதி அரேபியா குறிப்பிடவில்லை.
சவுதி வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இரு தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச சமூகம் முன் வர வேண்டும். என்றும் கூறியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். ஆனால் அண்டை முஸ்லீம் நாடான சவுதி அரேபியா இதனை கண்டுகொள்ளாததால், அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இஸ்லாமிய உலகம் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
தான் கொலை செய்யப்படலாம் என சவுதி இளவசர் சல்மான் நேரடியாகவே அமெரிக்காவிடம் அச்சத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இஸ்லாமிய உலகத்தின் ஆத்திரத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக, ஈரானுடன் இணைந்து செங்கடலில் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடத்த சவுதி முதன்முறையாக முன்வந்தது.
ஈரான் தான் தற்போது, காசா விவகாரத்தில் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் ஷியா நாடு என்ற எல்லைகளை தாண்டி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 கோடி இஸ்லாமியர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதனால் ஈரானுடன் நெருக்கம் காட்டுவது போல் சவுதி நடித்து வருவதாக கருதப்படுகிறது.
==========

  • Related Posts

    40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

    துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

    காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

    பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

    ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

    ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

    ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

    ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

    2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

    2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!