பாலஸ்தீன அதிகார சபையின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாற்றியுள்ளார். ...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் வடக்கு காசா பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் 400 நாட்களைத் தொட்டுள்ளது. ஏற்கனவே முறையான தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி கிடைக்காமல் குழந்தைகளும், பெண்களும் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், ...

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் சரமாரி தாக்குதல்; ஆக்கிரமிப்பு வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு. லெபனான் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களுக்கு, ஹிஸ்புல்லா போராட்டக்குழு பதிலடி கொடுத்து வருகிறது. வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த ...

சுதந்திர பாலஸ்தீனம் வேண்டி முழக்கம் எழுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் இஸ்ரேலியர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இஸ்ரேலின் கால் பந்து அணி, உள்ளூர் கிளப்பான அஜாக்ஸிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியைக் காண வந்த இஸ்ரேல் ரசிகர்களை முகமூடி அணிந்த ...

முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, இன்று SDPI கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற தொனியில் காட்சிப்படுத்தியிருப்பதாக எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் ...

அடில் ஷாஹி வம்சத்தின் முன்னாள் தலைநகரான விஜயபுராவில் உள்ள 43 நினைவுச்சின்னங்கள் 2005 இல் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்டன. கர்நாடகா வக்ஃப் வாரியம், விஜயபுராவில் உள்ள சின்னமான கோல் கும்பாஸ், இப்ராஹிம் ரௌசா மற்றும் பாரா கமான், பிதார் மற்றும் கலபுராகியில் உள்ள கோட்டைகள் உட்பட மாநிலம் முழுவதும் குறைந்தது 53 வரலாற்று ...

பாகிஸ்தானின் கராச்சியில், மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தீபங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் இந்து பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் பிறநாடுகளில் வசிக்கும் இந்துக்களைப் போல் தீபாவளி போன்ற பண்டிகையை ...

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எப்போதுமே சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள செல்ஃபி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முன்னதாகவே ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த மார்க்கின் மனைவி பிரிசில்லா, ஆனந்த் அம்பானி ...

ஹிஸ்புல்லாக்களின் பதுங்கிப் பாயும் தந்திரம் கதிகலங்க வைக்கிறது…. இஸ்ரேல் தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம்… 50 ஆயிரம் படைகளை குவித்தும், ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாத இஸ்ரேல்… இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் ...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் போராட்டக்குழுவான ஹமாஸை ஒழிக்க திட்டமிட்டது போலவே, கடந்த ஓராண்டாக லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வடக்கு ...