இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன.
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் போராட்டக்குழுவான ஹமாஸை ஒழிக்க திட்டமிட்டது போலவே, கடந்த ஓராண்டாக லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வடக்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்திவைத்த போதும், இறுதியில் இஸ்ரேல் படை தோல்வியைத் தழுவியுள்ளது. ஹிஸ்புல்லாக்களின் சாமர்த்தியமான போர் தந்திர யுக்திகளால் இஸ்ரேல் ராணுவம் பின்னடைவை சந்தித்துள்ளதாக லெபனான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லெபனான் பிரதம மந்திரி யிட்சாக் ராபினின் முன்னாள் ஆலோசகரான கர்னல் ஜாக் நெரியா கூறுகையில், “ஹிஸ்புல்லா போராளிகளின் பதுங்கிப் பாயும் தந்திரம், இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அடுக்குப் பிரிவைக் கூட கதிகலங்க வைத்துள்ளது. மேலும் இஸ்ரேல் படைக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 42 மெர்காவா டாங்கிகள், நான்கு புல்டோசர்கள், இரண்டு ஹம்மர்கள், ஒரு கவச வாகனம் மற்றும் ஒரு துருப்புக் கப்பல் ஆகியவற்றை அழித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 95 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 900 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீரங்கி, விமானப்படை என மிகப்பெரிய ஆயுத பலம் இருந்தும் லெபனானில் உள்ள சிறிய கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் இஸ்ரேல் பின்னடவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






