ஆம்ஸ்டர்டாமில் எதிரொலித்த ‘சுதந்திர பாலஸ்தீனம்’ முழக்கம்!

சுதந்திர பாலஸ்தீனம் வேண்டி முழக்கம் எழுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் இஸ்ரேலியர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இஸ்ரேலின் கால் பந்து அணி, உள்ளூர் கிளப்பான அஜாக்ஸிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியைக் காண வந்த இஸ்ரேல் ரசிகர்களை முகமூடி அணிந்த சில நபர்கள் தாக்கும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

அதில் சிலர் பாலஸ்தீனக் கொடியை கையில் ஏந்தி இருப்பது போலும், பாலஸ்தீனத்தை சுதந்திரமாக விடும்படி முழக்கங்களை எழுப்புவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் தங்களது அடையாளத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு, இஸ்ரேலியர்களை கொடூரமாக தாக்குவது போல் காட்டப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக கொன்று குவிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் உலக மக்களை இஸ்ரேல் மீது கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

மற்றொருபுறம் லெபனானின் பதிலடியைத் தாங்க முடியாமல் இஸ்ரேல் ராணுவம் திணறி வருகிறது. இதனால் மக்களிடையே தங்களது நாட்டின் மீதான நெகட்டீவ் இமேஜைக் காப்பதற்காக இஸ்ரேல் ஊடகங்கள் பல்வேறு வகையான வீடியோக்களை வைரலாக்கி வருகின்றன. அந்த வகையில், முகமூடி அணிந்த நபர்கள் இஸ்ரேல் கால்பந்து ரசிகர்களை கடுமையாக தாக்கியதாகவும், இதில் பலரும் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ மீதான நம்பகத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Related Posts

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Online Casino Payout Rates

    • By
    • February 24, 2026
    • 16 views

    Online Slot Payouts

    • By
    • February 24, 2026
    • 19 views

    Winmaster Casino 100 Free Spins Bonus 2026

    • By
    • February 24, 2026
    • 19 views

    Online Bingo No Deposit Bonuses

    • By
    • February 24, 2026
    • 17 views

    Best Time To Play Online Casino

    • By
    • February 24, 2026
    • 12 views

    Online Casino Australia No Deposit Bonus Australia

    • By
    • February 24, 2026
    • 15 views