கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு நீக்கும் தண்ணீர் ஆலையும் மூடப்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
இதனை வாயால் மட்டுமே கண்டித்து வருகின்றன உலக நாடுகள். இதனை இஸ்ரேல் புறந்தள்ளி, தனது அராஜக நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.இந்த நிலையில், இஸ்ரேலுக்கு 4 நாட்கள் அவகாசம் கொடுத்த ஏமன் ஹவுத்திப் படைகள், அந்த அவகாசம் செவ்வாய்கிழமையுடன் முடிந்ததையடுத்து, புதன் கிழமை முதல், இஸ்ரேலுக்கு எதிரான புதிய போர் அறிவிப்பை வெளியிட்டனர்.

Al-Houthi: Sana'a is Ready to Enter War Shall US Participate Directly in Conflict - Palestine Chronicle

 

இஸ்ரேலுக்கு செல்லும் இஸ்ரேலிய கப்பல்கள், 4 கடற்பகுதிகளில் தாக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே அந்நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ள, அந்நாட்டின் தலைவர் சையத் மாலிக் அல் ஹவுத்தி, கடற் முற்றுகை என்பது ஒரு பகுதி தான் என்றும், பல திட்டங்கள் மேசையில் தயார் நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
அதே நேரம் சவுதி, அமீரகம் ஜோர்டான் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். உலக வங்கி வெளியிட்டுள்ள தகவலில், ஏமனின் முற்றுகையால், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இஸ்ரேலில் ஏற்பட்ட நிலையில், அமீரகம், சவுதி, ஜோர்டான் வழியாக, சாலை மார்க்கமாக, இஸ்ரேலுக்கு உணவுப் பொருட்கள் செல்வதாக தெரிவித்துள்ளது.இதனை இந்த நாடுகள் மறுக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாடுகள் மதக் கடமையை ஆற்றுவது இல்லை என்பதோடு, மனிதாபிமானமும் இல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

  • Related Posts

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

    காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 8 views