ஈரான் ஐ.நா. தூதருடன் எலான் மஸ்க் திடீர் சந்திப்பு!

ஐ.நா.விற்கான ஈரான் தூதரருடன் எலான் மஸ்க் சந்திப்பு…
தெஹ்ரான் -வாஷிங்டன் இடையிலான பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை…

காசா மற்றும் லெபனானைத் தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஈரானை குறிவைத்து வருகின்றன. அதேபோல் லெபனானைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இந்த போரில் அமெரிக்கா களமிறங்கினால், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கக்கூடும். இதனால் மத்திய கிழக்கில் தொற்றியுள்ள பதற்றம் அடுத்த உலகப்போராக மாறக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐ.நாவிற்கான ஈரான் தூதரான அமீர் சயீத் இரவானியை, டொனால்ட் டிரம்புடன் நெருங்கிய நட்புறவில் இருப்பவரான எலான் மஸ்க் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரகசிய இடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது எலான் மஸ்க், அமீர் சயீத் இரவானியிடம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கோ அல்லது அவரது குடியரசுக் கட்சிக்கோ இஸ்ரேலின் பழமைவாதிகளின் மோசமான அணுகுமுறை பிடிக்கவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், இந்த சந்திப்பு தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related Posts

40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 16 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 19 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 19 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 17 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 12 views

Online Casino Australia No Deposit Bonus Australia

  • By
  • February 24, 2026
  • 15 views