காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்திவரும் இனப்படுகொலை எதிராக ஏற்கனவே ஐரோப்பாவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல முன்னணி ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை குறைத்து, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன. இப்படி ஏற்கனவே ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இத்தாலியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்று, ...
சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார். காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருப்பது இஸ்ரேல் மீது உலக நாடுகளின் பார்வையை திருப்பியுள்ளது. ...
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு ஆளாகக்கூடும் என்றும், நோய் மற்றும் பசியால் ஏராளமானோர் உயிரிழக்ககூடும் என்றும் சர்வதேச உணவு ...
லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார். லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன் தாக்குதல் ஆக்கிரமிப்பு படைகளை சிதறடித்து வருகிறது. மற்றொருபுறமும் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை ...
399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பாலஸ்தீன போராட்டக்குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜபாலியா ...
ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்… இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி… ராணுவ தொழிற்சாலை நாசம்… சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் ...
இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் கனடா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசு போதுமான ஆயுதங்கள் இல்லாமல் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஆக்கிரமிப்பு ராணுவம் “கடுமையான ஆயுதச் சிக்கன கொள்கை” ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் போர்களை நடத்தி வரும் படை தளபதிகள் தேவைக்கு மட்டுமே ...







