வடக்கு காசாவில் பஞ்சம் பற்றி விவாதிக்க கூடுகிறது UNSC!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு ஆளாகக்கூடும் என்றும், நோய் மற்றும் பசியால் ஏராளமானோர் உயிரிழக்ககூடும் என்றும் சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.

வடக்கு காசாவில் கடும் பஞ்சம் ஏற்படக்கூடும் என்பது மிகுந்த கவலை அளிப்பதாகவும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபைக்கான அல்ஜீரியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்மார் பெஞ்சமா வடக்கு காசாவில் ஏற்படவுள்ள பஞ்சம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தார். அம்மார் தனது உரையின் போது, “இஸ்ரேல்” பட்டினியை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதால், எஞ்சியிருப்பதைக் காப்பாற்ற ,காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கயானா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்துடன் ஆகிய நாடுகளும் இதே கோரிக்கையை முன்வைத்ததால், அதனை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பஞ்ச ஆய்வுக் குழுவின் அறிக்கையை பின்பற்றி காசாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!