அடுத்தடுத்த சரமாரித் தாக்குதல்கள் நடுக்கத்தில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்…
இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி…
ராணுவ தொழிற்சாலை நாசம்…
சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர்.
இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் என்பது, இஸ்ரேலின் ராணுவ உளவுப் பிரிவான 8200 அமைப்பின் தலைமைகயத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

தொடர்ந்து சனிக்கிழமை காலை ஒரு மணி நேரத்தில் லெபனானில் இருந்து பல ஆளில்லா விமானங்கள் வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா ஏவியுள்ளது, இதனால் ஹைஃபா பகுதியில் சைரன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருக்கும் செய்தியில் ஹிஸ்புல்லா ஏவிய இரண்டு ஆளில்லா விமானங்களில் ஒன்றை இஸ்ரேலிய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஆளில்லா விமானம் நஹாரியா அருகே உள்ள ஒரு தொழிற்சாலை கட்டிடத்தை தாக்கியதாகவும் கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆளில்லா விமானங்கள் மற்றும் தொழிற்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து இஸ்ரேலிய சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது