பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனிடையே எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அதில் காசாவை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவில், 2 ஆண்டுகளில் மறு கட்டமைப்பு செய்வது, காசாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவது, போன்ற பல முன்மொழிவுகளை கூறியது. இதனை பரிசீலிப்பதாக ஹமாஸ் அமைப்பும் கூறியுள்ளதாக அமெரிக்கா ஊடகங்களிடம் கூறியுள்ளது. எனினும் ஹமாஸ் இது குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறாமல் இருந்து வருகிறது.

 U.S. President Donald Trump meets with Irish Taoiseach (Prime Minister) Micheal Martin in the Oval Office at the White House in Washington, D.C., U.S., March 12, 2025.  (photo credit: REUTERS/EVELYN HOCKSTEIN)

இதனையொட்டி, அமெரிக்காவே நேரடியாக ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுவே, இஸ்ரேலுக்கு பேரிடியாக அமைந்தது. இந்தச் சூழலில் அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்டினை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, டிரம்பிடம் காசா மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், காசாவில் இருந்து, யாரையும், யாரும் வெளியேற்றப் போவதில்லை என அறிவித்தார்.
இது அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேலை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.https://www.timesofisrael.com/liveblog_entry/hamas-official-welcomes-trumps-assertion-that-no-gazans-will-be-expelled/
இதனிடையே டிரம்பின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. இதுகுறித்து அறிக்கை அளித்துள்ள, ஹமாசின் செய்தித் தொடர்பாளர் ஹாசெம் காசிம், தீவிர யூத வலதுசாரிகளின் நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் பின்வாங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 9 views