ஈரான் பேங்க் கார்டுகளை இனி ரஷ்யாவிலும் பயன்படுத்தலாம்!

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் சர்வதேச நிதி அமைப்பான SWIFT-யில் இருந்து, 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. அடுத்ததாக உக்ரைன் மீது போர் தொடுத்ததால் 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவும் சர்வதேச நிதி அமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.

இதனால் உலக நாடுகளுடனான நிதி பரிவர்த்தனை என்பது இரண்டு நாடுகளுக்கும் சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில் ஈரான் – ரஷ்யா இரண்டும் ஒன்றிணைந்து புதிய நிதி பரிவர்த்தனை திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அதாவது ஈரானின் வங்கி அட்டைகள் அனைத்தையும் இனி ரஷ்யாவில் தாராளமாக பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் வங்கிகளுக்கு இடையேயான வலையமைப்பான ஷெடாப் (Shetab) மற்றும் ரஷ்யாவின் வலையமைப்பான மிர் ( Mir) ஆகியவற்றை ஒண்றினைத்ததன் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. இதன் மூலமாக இனி ஈரானியர்கள் ரஷ்யாவில் பணம் எடுத்துக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் ரஷ்ய கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை ரஷ்யாவைத் தொடர்ந்து ஈராக், ஆப்கானிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளிலும் செயல்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

  • Related Posts

    40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

    துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

    காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Online Casino Payout Rates

    • By
    • February 24, 2026
    • 16 views

    Online Slot Payouts

    • By
    • February 24, 2026
    • 19 views

    Winmaster Casino 100 Free Spins Bonus 2026

    • By
    • February 24, 2026
    • 19 views

    Online Bingo No Deposit Bonuses

    • By
    • February 24, 2026
    • 17 views

    Best Time To Play Online Casino

    • By
    • February 24, 2026
    • 12 views

    Online Casino Australia No Deposit Bonus Australia

    • By
    • February 24, 2026
    • 15 views