ஏமாத்து வேலைகள் போதும் – இஸ்ரேல் பிரதமரை கடுமையாக சாடிய எதிர்க்கட்சித் தலைவர்!

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹிமாஸ் அமைப்பு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்தும் மாநில அளவிலான விசாரணைக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைக் கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் அக்டோபர் 7 தாக்குதல், இஸ்ரேல் உருவானதில் இருந்தே எதிர்கொள்ளப்பட்ட மோசமான பேரழிவு என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தோல்வி என்றும் சரமாரியாக சாடியுள்ளார். இஸ்ரேல் பிரதமரின் தோல்வி குறித்து விசாரிக்க மாநில விசாரணைக்குழுவைக் காட்டிலும் சிறப்பான குழுவை அமைக்க முயல்வதாக அரசு சொல்லி வரும் காரணங்களை காண்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் நெதன்யாகு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக சிறப்பு குழு என்ற பெயரில் அலங்காரத்திற்கு ஒரு விசாரணைக்குழுவை அமைக்க முயல்கிறது எனக்கூறியுள்ள அவர், தனது ஏமாந்து வேலைகள் மற்றும் புனைவுகளை நிறுத்திக் கொள்ளும் படி நெதயாகுவை கடுமையாக சாடியுள்ளார். மேலும் தனது பொறுப்பான பதவிக்கு அழகாக, உயிரிழந்த குடும்பங்கள்,காயமடைந்தவர்கள், பணயக்கைதிகள் மற்றும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உங்கள் தார்மீகக் கடமையாக ஒரு மாநில விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மாநில விசாரணைக்குழுவின் விசாரணையைக் கோருவது இஸ்ரேல் பிரதமர் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  • Related Posts

    40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

    துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

    காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 9 views