ஈரான் – ஈராக் இடையே முக்கிய ஆலோசனை – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் காசா, லெபனானைத் தொடர்ந்து ஈரான் மீதும் தனது தாக்குதல்களை கட்டவிழ்ந்துவிட்டு வருகின்றன. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மனித உரிமை மீறல்களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டும், காணாதது போல் உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் வகையில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் இந்த தாக்குதல்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவுகளை ஈராக் வழங்கி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் – ஈராக் அமைச்சர்களுக்குகிடையிலான சந்திப்பு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது.

ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல்-அராஜி ஆகியோர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, ஈரானின் பாதுகாப்பை மீறும் எந்த நடவடிக்கைக்கும் பாக்தாத் மற்றும் குர்திஸ்தான் பகுதிகளில் இருந்து பதிலடி கொடுக்கப்படும் என ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல்-அராஜி உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது ஈராக்கின் பாதுகாப்பிற்காக ஈரானும், ஈரானின் பாதுகாப்பிற்காக ஈராக்கும் ஒன்றிணைந்து நிற்கும் என இருநாட்டு அமைச்சர்களும் உறுதி அளித்துள்ளனர். இது “இரண்டு நாடுகளும் வேறு, வேறு அல்ல… ஒன்றின் மேல் கைவைத்தால், மற்றொரு நாடு சும்மா இருக்காது” என இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை நடத்தி வரும் மோசமான போரால் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts

40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!