“போர் நிறுத்தத்திற்கு முன்மொழியவில்லை” – ஹிஸ்புல்லா செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

போரை நிறுத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவையும் போராட்டக்காரர்கள் விடுக்கவில்லை என்றும், நீண்ட போரை நடத்த தேவையான ஆயுதங்கள் தங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மொஹெட் அஃபிஃப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானில் கடந்த 6 வாரங்களாக போரிட்டு வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்களது பகுதிகளை தக்கவைத்துக்கொள்ள தவறவிட்டதாகவும், கடந்த வாரம் தெற்கில் உள்ள கியாமி நகருக்குள் நுழைய முயன்ற ஆக்கிரமிப்பு படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தங்களிடம் இருந்த பெரும்பாலான ஏவுகணைகளை இழந்துவிட்டதாக இஸ்ரேல் பரப்பி வரும் தகவல்களை முற்றிலும் பொய் என மறுத்துள்ள அவர், மத்திய இஸ்ரேலைக் குறிவைத்து தினந்தோறும் டஜன் கணக்கான ஏவுகணைகளை தங்களால் ஏவ முடியும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள பைனா நகரத்தின் மீது ஹிஸ்புல்லா நடத்திய சரமாரி ராக்கெட் தாக்குதலில் 40 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை 50 ராக்கெட்டுகளை ஏவி நடத்தியதாக ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளார்.

  • Related Posts

    40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

    துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

    காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

    பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

    ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

    ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

    ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

    ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

    2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

    2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!