மாலத்தீவில் ஹிஜாப் அணிந்து வலம் வந்த பிரபல நடிகை!

இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் சனா கான். நடிகை, மாடல், டான்சர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்த இவர், 2012ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் 2020ம் ஆண்டு திடீரென திரைத்துறையை விட்டு விலகி இவர், முஃப்தி அனஸ் சயத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிந்து கொண்டு மட்டுமே செல்ல ஆரம்பித்தார். இதற்கு காரணம் தனக்கு வந்த மரணம் தொடர்பான கனவு, தனது மார்க்கம் மீது தீவிரமான பற்றுதலைக் கொண்டு வந்ததாகவும், அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்ததாகவும் சோசியல் மீடியா மூலமாக அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்று முதல் இன்று வரை சனா கான் சோசியல் மீடியாக்களில் கூட ஹிஜாப் இல்லாத புகைப்படங்களை பகிர்வது கிடையாது.

ஆனால் சனா கானின் இந்த அறிவிப்பு அப்போது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டேண்ட் என பலரும் விமர்சித்தினர். ஆனால் அனைவரது முகத்திலும் கறி பூசுவது போன்ற வீடியோ ஒன்றிணை சனா கான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சமீபத்தில் சனா கான் தனது கணவருடன் மாலத்தீவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். வழக்கமாக முன்னாள் அல்லது இந்நாள் நடிகை என யாராக இருந்தாலும் மாலத்தீவில் கால் வைத்துவிட்டாலே கலக்கலான போட்டோஷூட்களை நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். இன்னும் சில நடிகைகள் ஒரு படி மேலே போய் அரைகுறை ஆடைகளில் போட்டோஷூட்களை நடத்துவது உண்டு. ஆனால் சனா கான் மாலத்தீவிலும் ஹிஜாப் உடையில் தான் வலம் வருகிறார். அதுமட்டுமின்றி நேரம் தவறாமல் தொழுகையிலும் ஈடுபடுகிறார். இதன் மூலமாக சனா கான் சினிமாவிற்கு முற்றிலுமாக முழுக்கு போட்டு விட்டு, இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் போதனைகளையும் முழுமையாக பின்பற்றி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 9 views