காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்திவரும் இனப்படுகொலை எதிராக ஏற்கனவே ஐரோப்பாவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல முன்னணி ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை குறைத்து, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன. இப்படி ஏற்கனவே ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இத்தாலியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்று, இஸ்ரேலியர்களின் முன்பதிவை ரத்து செய்து புதிய புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
வடக்கு இத்தாலியில், டோலோமைட்டுக்கு அருகேயுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலான கர்னி ஒங்காரோவில் தங்குவதற்காக இஸ்ரேல் நாட்டினர் சிலர் முன்பதிவு செய்துள்ளனர். டிரக்கிங் மற்றும் ஹைகிங் செல்வதற்காக இஸ்ரேல் நண்பர்கள் குழு ஒன்று, அவர்களது முன்பதிவை ஓட்டல் நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது. “இனப்படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய மக்கள் தங்களது வாடிக்கையாளராக இருக்கத் தேவையில்லை என்றும், முன்பதிவை நீங்களே கேன்சல் செய்து கொள்ளலாம்..இல்லையெல் நாங்களே இலவசமாக கேன்சல் செய்து விடுகிறோம்” என நேரடியாக மெயில் அனுப்பி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் துணிச்சலான முடிவை வரவேற்று வருகின்றனர்.






Leave a Reply