தெற்கு லெபனானின் எல்லையில் அமைந்துள்ள நகரமான மார்காபாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கும், ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையை முன்னேறவிடாமல் தடுக்க பதுங்கியிருந்தும் தாக்கும் தந்திரத்தை ஹெஸ்புல்லா பின்பற்றி வருகிறது. நேற்று இரவு சரியாக 10 மணி அளவில் இஸ்ரேல் தரைப்படையைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது ஹெஸ்புல்லா, ஏடிஜிஎம் (ATGM) எனப்படும் மெர்காவா பாதுகாப்பு டாங்கிகளை தாக்கி அளிக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. இவர்களிடம் தங்களது பதுங்கி பாயும் யுக்தியைப் பயன்படுத்திய ஹெஸ்புல்லா, மற்றொரு ஏஜிடிஎம் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. இதனையடுத்து இரவு 11.10 மணிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை மீது ஹெஸ்புல்லா தனது 3வது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீரர்கள் பலியாகியிப்பதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே கியாம், மார்கவா மற்றும் சாமா போன்ற பல நகரங்களில் பின்னடைவை சந்தித்து வரும் இஸ்ரேல், மார்காபாவில் ஹெஸ்புல்லாவின் பதுங்கி பாயும் தந்திரத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளது.






