பாலஸ்தீனியர்களுக்காக ரூ. 182 கோடி நிதி! அயர்லாந்து அதிரடி!

ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை, அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தியுள்ளன. அந்த அமைப்புக்கு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, பாலஸ்தீனியர்களுக்கு உணவு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அயர்லாந்து, சுமார் 20.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு ஒதுக்கியுள்ளது.
ஐ.நா. அகதிகள் அமைப்பு என்பது இன்றியமையாத ஒன்று. காசாவிற்கு இது மிக முக்கியமான தருணம். மனிதநேய சேவைகள் அங்கு சென்று சேர்வதற்காக இந்த நிதி உதவி அறிவிப்பை அர்த்தத்துடன் வெளியிட்டுள்ளோம் என அயர்லாந்தின் வெளியுறவுத்துறை Simon Harris அமைச்சர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் சைமன் ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.