சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார்.
காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருப்பது இஸ்ரேல் மீது உலக நாடுகளின் பார்வையை திருப்பியுள்ளது.
ரியாத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லீம் மற்றும் அரபு தலைவர்களின் உச்சிமாநாட்டில் பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், போர் என்ற பெயரில் காசாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்து வருவதாகவும், உடனடியாக போரைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்படவிடாத வரை சவூதி அரேபியா, இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் எச்சரித்துள்ளார். அத்தோடு ஈரான் மீது இஸ்ரேல் குறிவைப்பதை சர்வதேச சமூகங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.






Leave a Reply