காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனிடையே ...
காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2 ஆண்டுகளில் ...
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் டொனால்டு டிரம்பின் திட்டத்தை நிராகரித்து, எகிப்து முன்மொழிந்த திட்டத்தை அரபு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, அரபு லீக் அமைப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பான OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், டிரம்பின் திட்டத்தை நிராகரிப்பதோடு, அரபு லீக்கின் நிலைப்பாட்டை ...
ஒரே தவணையில் அனைத்து கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கு நரகத்தை சந்திக்கும் என்றார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், கைதிகள் படிப்படியாக மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும், அந்த பகுதியை ரிவேராவாக மாற்றுவேன் என்றார் டிரம்ப். இதனை அவரது கூட்டணி அரபு நாடுகள் கூட ஏற்றுக் ...
இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கி இருக்கிற ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக இருக்கிறது.இந்தத் ...
காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமன் ஹவுத்திப் படைகள் இஸ்ரேலுக்கு எதிரான கடல் முற்றுகை போராட்டத்தை 15 மாதங்களாக நடத்தினர். காசாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவர்களும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில், காசாவை முழுமையாக அமெரிக்கா கைப்பற்றும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு உலக நாடுகள் ...
காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை ...
ஈரான் விமானப்படை அதிகாரிகள் மத்தியில் அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி உரை நிகழ்த்தினார். அமெரிக்கர்கள் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, உலகின் வரைபடங்களை மாற்றி வருகின்றனர். இது உண்மையில் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நடைமுறைக்கு வராது. அவர்களால் அதனை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அமெரிக்க அதிபரின் முடிவையே ...
டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காசா மக்கள் எகிப்து ...









