கிழித்து தொங்கவிட்ட ஏமன் தலைவர்!

காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமன் ஹவுத்திப் படைகள் இஸ்ரேலுக்கு எதிரான கடல் முற்றுகை போராட்டத்தை 15 மாதங்களாக நடத்தினர். காசாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவர்களும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், காசாவை முழுமையாக அமெரிக்கா கைப்பற்றும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஏமன் தலைவர் சையத் மாலிக் அல் ஹவுத்தி நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது, பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக அவர்களின் தாய் நிலத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ஏமன் அதன் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தும். இந்த விவகாரத்தில் ஏமன் ஒரு போதும் பார்வையாளராக இருக்காது. டொனால்டு டிரம்ப் ஒரு முட்டாள் மட்டுமல்ல. கிரிமினல். அவர் அறிக்கைகள் மூலம் அதனை அறியலாம். ஒரு நாகரீகமான நாடாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் தலைவர், நகைச்சுவைக்காக அறியப்படுகிறார்.

 

காசா தொடர்பான டிரம்பின் திட்டம் ஒரு கிரிமினல் திட்டம். இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். கிரிமினல் மற்றும் கொடுங்கோண்மை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான அமெரிக்க அதிபரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். எனவே இது நமக்கு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை.
அவது முதல் ஆட்சிக் காலத்தை DEAL OF CENTURY என அழைத்துக் கொண்டார். இரண்டாவது ஆட்சிக்காலம் CRIME OF CENTURY ஆக உள்ளது.பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வெளியேற்றுவதன் மூலம், பாலஸ்தீன தனிநாடு கனவை அழிக்க நினைக்கின்றனர். இஸ்ரேலால் செய்ய முடியாததை, தான் செய்ய நினைக்கின்றார் டிரம்ப்.

காசாவில் மக்கள் கொல்லப்படுவதை அரபு நாடுகள் வேடிக்கை பார்த்தன. அப்படி இருந்தும் கூட டிரம்ப் அவர்களை மதிக்கவில்லை. காசாவில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும் திட்டத்தை, அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான் ஏற்றுக் கொள்வதை பொருத்தே, இந்த திட்டம் வெற்றியோ, தோல்வியோ அடையும். எனவே அண்டைநாடுகள் இதனை முறியடிக்க வேண்டும். அவர்களின் நோக்கம் அல் அக்சா மசூதியை கைப்பற்றுவது மட்டுமல்ல. இதர அரபு புனிதத் தலங்களை கைப்பற்றுவது தான் சியோனிச செயல்திட்டம்.டிரம்பின் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய உம்மத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். அப்படி ஏதாவது அரபு நாடு செய்தால், அது மாபெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். டிரம்ப் அரபு நாடுகளின் தலைவர்களை சிக்க வைக்க பார்க்கிறார். என்று சையத் மாலிக் அல் ஹவுத்தி தெரிவித்தார்.

கைதிகளை விடுவிக்காவிட்டால், ஹமாஸ் நரகத்தை பார்க்க நேரிடும் என டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பதில் அளித்த சையத் மாலிக் அல் ஹவுத்தி, ஏமன் எப்போதும் பாலஸ்தீனியர்களின் பக்கம் நிற்கும். நரகம் எங்களுக்காக காத்திருக்கவில்லை. டிரம்பை போன்ற கிரிமினல்களுக்கு தான் நாங்கள் நரகத்தை தயார் நிலையில் வைத்துள்ளோம். காசாவில் மீண்டும் போர் தொடங்கினால், அமெரிக்காவுக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் எங்களது போரும் தொடங்கும் என போர் அறிவிப்பை வெளியிட்டார். ஏமன் படைகள் தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.பாலஸ்தீனியர்களே நீங்கள் தனியாக இல்லை, உங்களுடன் ஏமன் இருக்கிறது என தனது உரையை முடித்துக் கொண்டார்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 8 views