டிரம்பின் திட்டத்தை நிராகரித்த அரபு மாநாடு

இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கி இருக்கிற ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக இருக்கிறது.இந்தத் திட்டத்தை பாலஸ்தீனியர்களுடன் இணைந்து மற்ற பிற அரபு நாடுகளும் ஒருங்கிணைந்து திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இது அரபு நாடுகளின் உதவியால் காசாவின் உள்கட்டமைப்பை முழுமையாக மீண்டும் கட்டி எழுப்பி அத்தியாவசிய சேவைகளை புதுப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த உச்சி மாநாட்டில் பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடம்பெயரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டத்தை முழுமையாக நிராகரித்து உள்ளது.அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அது குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இடப்பெயர்வு திட்டம் இனப்படுகொலை குற்றத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்த முடியுமா என்பதை ஒரு அரபு சட்ட குழு ஆராயவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மாநாடு காசாவிற்கு மனிதாபிமான உதவியை நிறுத்தும் வகையில் சமீபத்தில் இஸ்ரேலால் கொண்டுவரப்பட்ட சில கட்டுப்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும் சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.மனிதாபிமான உதவிகளை காசா மக்களுக்கு கிடைக்காமல் இஸ்ரேல் தடுத்து இருப்பதால் காசா மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளுக்கு அரபு உச்சி மாநாடு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!