திட்டத்தை மாற்றிய டிரம்ப்

ஒரே தவணையில் அனைத்து கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கு நரகத்தை சந்திக்கும் என்றார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், கைதிகள் படிப்படியாக மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும், அந்த பகுதியை ரிவேராவாக மாற்றுவேன் என்றார் டிரம்ப். இதனை அவரது கூட்டணி அரபு நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, மீண்டும் காசாவில் உள்ள கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், ஹமாஸ் தலைவர்கள் வெளியேற வேண்டும் என்ற புதிய நிபந்தனையை டிரம்ப் விதித்துள்ளார். இதனை செய்யாவிட்டால், அனைவரும் இறக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

 

In his Congress address, Trump reiterates his vision for an isolationist  America and here's what he has in mind | The Indian Express

டிரம்ப்பின் மிரட்டலை நிராகரித்துள்ள ஹமாஸ் அமைப்பு, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்ட விதிகளை தாங்கள் சரியாக கடைபிடித்ததாகவும், இஸ்ரேல் சரிவர கடைபிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டித்துள்ள இஸ்ரேல், இரண்டாம் கட்ட போர் நிறுத்தை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. 2ஆம் கட்ட போர் நிறுத்தம் என்பது, இஸ்ரேலிய படைகள் காசாவை விட்டு முழுமையாக வெளியேறுவது ஆகும்.இதனிடையே அமெரிக்காவின் மத்திய கிழக்கு ஆலோசகர் ஸ்டீவ் விட்காஃப், அடுத்த வாரம் இஸ்ரேல் செல்ல உள்ளார்.அதுவரை ஹமாஸ் கைதிகளை விடுவிக்கா விட்டாலும் கூட, இஸ்ரேல் எந்த தாக்குதலையும் தொடங்க கூடாது, போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அவர் நெதன்யாகு அரசை நிர்பந்தித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.இதனிடையே 1977க்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவே ஹமாசுடன் நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலின் இறையாண்மையை நேரடியாக கேள்விக்குறியாக்கியுள்ளது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 9 views