3 இஸ்ரேல் கைதிகள் விடுதலை! 183 பாலஸ்தீனியர்கள் விடுதலை!

இஸ்ரேலிய கைதிகள் Keith Siegel, Ofer Kalderon, Yarden Bibas ஆகிய 3 பேர் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் வைத்து, சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு நிகராக 90 நீண்ட கால கைதிகள் உள்ளிட்ட 183 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.காசா சிட்டி பகுதியில் நடைபெற்ற விடுதலை நிகழ்ச்சியின் போது, ஹமாசின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையின் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.விடுவிக்கப்பட்ட கைதிகளை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றனர்.

இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, 18 பாலஸ்தீனிய ஆயுள் தண்டனை கைதிகள், 54 நீண்ட நாள் கைதிகள் ஆகிய 90 பேரை இஸ்ரேல் விடுவிக்கிறது. இது மட்டுமின்றி, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு, எந்த வித குற்றச்சாட்டும் இன்றி, இஸ்ரேல் படைகளால் காசாவில் வைத்து கைது செய்யப்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் 117 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக 3 இஸ்ரேலியர்களுக்காக 184 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.முந்தைய கைதிகள் விடுதலையின் போது, கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தற்போதைய நிகழ்ச்சியை அதிக ஒழுங்குடன், கட்டுக் கோப்புடன் ஹமாஸ் நடத்தியதாக அல் ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.