டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசா மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு இடம்பெயர வேண்டும், அந்நாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், மூடத்தனமாக கருத்து ஒன்றை தெரிவித்தார். இதனை அரபு நாடுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன.

பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவிகளை டிரம்ப் நிறுத்தி வருகிறார்.எகிப்து, மற்றும் ஜோர்டானுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கி வருவதால், அதனை தொடர வேண்டுமானாலும் டிரம்ப்பின் கட்டளையை அந்நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தும், எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் டிரப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.கடந்த சனிக்கிழமை கெய்ரோவில் 6 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலும் டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ளனர்.






Leave a Reply