சுப்ரீம் தலைவருடன் சந்திப்பு!

ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ஈரானின் அடிப்படை பிரச்னை. பாலஸ்தீனியர்களின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. என ஹமாஸ் தலைவர்களிடம் கமெனி தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணு ஆராய்ச்சியை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்பதற்காக “அதிகபட்ச அழுத்தம்” என்ற கொள்கையை டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை நிராகரித்துள்ள ஈரானின் சுப்ரீம் தலைவர், அமெரிக்காவுடன் இதுகுறித்து பேசுவது, விவேகமானதும் அல்ல, அறிவுப்பூர்வமானதும் அல்ல, மரியாதைக்குரியதும் அல்ல எனத் தெரிவித்திருந்தார்.டிரம்பின் அச்சுறுத்தல்கள், ஈரானில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், பாலஸ்தீனிய விவகாரத்தில் ஈரான் மக்களின் முடிவு தெளிவானது என்றும் அலி கமெனி கூறியுள்ளார்.