கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை! வேடிக்கை பார்க்கும் உலகம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தி கருவில் உள்ள குழந்தையுடன் கர்ப்பிணி பாலஸ்தீனியப் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேற்கு கரை பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில். இந்தத் தாக்குதல் , மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளிடமிருந்து கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது .எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த 23 வயதான சுண்டோஸ் ஜமால் முகமது ஷலாபி, அவரது கருவில் உள்ள குழந்தையுடன் கொல்லப்பட்டதை பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.இந்த தாக்குதலில் ஷலாபியின் கணவர் படுகாயமடைந்தார். பாலஸ்தீனிய ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட நேரில் கண்ட சாட்சிகளின்படி, வன்முறையிலிருந்து தப்பிக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது கணவர் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஷலாபியின் கொலைக்கான விளக்கத்தை வெளியிடவில்லை.இஸ்ரேலில் நடந்து வரும் இனச் சுத்திகரிப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாலஸ்தீனிய முகாம்கள் முற்றுகை, குடியிருப்பாளர்களை கட்டாயமாக வெளியேற்றுதல், பெரிய அளவிலான கட்டிட இடிப்புகளை நிகழ்த்துவது, புல்டோசரை கொண்டு வீடுகள் மற்றும் சாலைகளை அழித்தது, ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால பணியாளர்களை தடுத்தது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலியப் படைகள் “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற போலிக்காரணத்தின் கீழ் தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து நியாயப்படுத்துகின்றன, அதே நேரத்தில் பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து படுகொலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் அவர்களின் வீடுகளை அழிப்பதை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது, ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டம் திணிக்கப்படுகிறது என ஒப்பாரி வைக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பெண்ணுரிமை போராளிகளும், இதுபோன்ற நிகழ்வுகளின்போது, மாயமாகி வருவது வழக்கமாக உள்ளது.