காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பு வீரர்களின் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
காசாவில் இருந்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு வீரர்கள் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து மக்களை கண்காணிக்கும் நோக்கில், உயர்மட்ட கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டு வந்தன.இந்த சூழலில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று காற்றின் வேகத்தால், சரிந்து விழுந்ததில், கீழே முகாமுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஆக்கிரமிப்பு ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.







Leave a Reply