இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் வடக்கு காசா பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் 400 நாட்களைத் தொட்டுள்ளது. ஏற்கனவே முறையான தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி கிடைக்காமல் குழந்தைகளும், பெண்களும் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், வடக்கு காசாவில் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடும் பஞ்சம் ஏற்படும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
வடக்கு காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடுமையான பஞ்சம் நிலவும் என நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த நிலை தொடர்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே காசாவில் உள்ள குழந்தைகள் மத்தியில் 30 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர பஞ்ச அபாயம் குறித்து எச்சரிக்கை பாலஸ்தீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை பாலஸ்தீன மக்களை சரணடைய வைப்பதற்காக செயற்கையான பஞ்சத்தை உருவாக்க முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏனெனில் கடந்த பைடன் ஆட்சியின் போது இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை சரிசமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தீவிரமடைந்ததால் இஸ்ரேல் பைடனின் வார்த்தைகளை காற்றி பறக்கவிட்டதாக தெரிகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் ஏற்படப்போகும் இந்த பஞ்சத்தால், வடக்கு காசாவில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.






Leave a Reply