காசா மக்கள் தங்களது நிலங்களை தன்னிடம் விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்களை எகிப்து, ஜோர்டான் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப் வினோத கருத்தை கூறி வருகிறார்.இதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். காசாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இஸ்ரேல் இருந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இந்த புதிய முடிவை அறிவித்தார். இந்த நிலையில், முதன் முறையாக ஏமன் ஹவுத்தி தலைவர் சையத் மாலிக் அல் ஹவுத்தி, இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

டிரம்பே நீ ஒரு முட்டாளா, உன்னிடம் நிலத்தை விற்பனை செய்வதற்கு தான், இத்தனை நாட்களாக, அவர்கள் உயிர்கள், உடமைகளை இழந்து போரிட்டு வென்றுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொட்டால், துப்பாக்கிகளில் தங்கள் கை தயார் நிலையில் உள்ளதாகவும், டிரிக்கரை அழுத்து விடுவோம் என்றும் அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் மற்றும் இஸ்ரேலின் நோக்கம், அல் அக்ஸாவை மட்டும் கைப்பற்றுவது அல்ல, மாறாக, மக்கா மதீனா நகரங்களையும் கைப்பற்றுவது தான் அவர்களது நோக்கம் என்றும் அரபு நாடுகளுக்கு சையத் மாலிக் அல் ஹவுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.






