சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறாமல் தவிர்த்து வந்த அதன் ஆட்சியாளர் அகமது அல் சாரா முதன் முறையாக, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.டொனால்டு டிரம்பின் கருத்து கடுமையான குற்றம் என சாடியுள்ள அவர், அது இறுதியில் தோல்வியில் தான் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மண்ணின் மைந்தர்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றும் சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. உலகின் பல நாடுகள் அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு, இறுதியில் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

காசா போரிலும் அது தான் நடந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேல் நடந்த போரின் முடிவில் மண்ணின் மைந்தர்கள் தான் வென்றுள்ளார்கள். 80 வருடங்களாக இந்த பிரச்னை நடந்து வருகிறது. பலமுறை காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகள் நடந்துள்ளன. அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.சில நேரங்களில் அகதிகளாக மக்கள் வெளியேறினர். ஆனால் அவர்கள் கூட இன்று வேதனையில் உள்ளனர். அவர்கள் அன்று எடுத்த முடிவு தவறு என இப்போது கூறுகின்றனர். நிலம் எவ்வளவு முக்கியமானது என அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இவ்வாறு சிரியாவின் தற்போதைய ஆட்சியாளர் அகமது அல் ஷாரா தெரிவித்துள்ளார்.






