5 முறையாக சம்பவம்

காசாவில் இருந்து 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் சிறைகளில் கொடுமைகளை அனுபவித்து வந்த 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கும் நிகழ்ச்சியை வழக்கம் போல் ஹமாஸ் பிரமாண்டமாக நடத்தியது. இதில் ஹமாசின் ஆயுதம் தாங்கிய போராளிகள் 100க்கணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான காசாவாசிகளும் வழக்கம் போல் குவிந்திருந்தனர்.

அதே போல் மறுபுறம், 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தோல் நோய் காரணமாக, தங்களது அன்புக்குறியவர்களை கட்டியணைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.காசாவில் பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேல் கைதிகள், மரியாதையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீனியர்கள் அவமதிக்கப்பட்டு, கடும் துன்பங்களை சந்திக்க நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.