காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். முதல் 6 மாதங்கள் இடிபாடுகளை அகற்றுவது, அடுத்ததாக, தற்காலிக குடியிருப்புகள், குடி நீர், மின்சாரம், சாலை, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, அதற்கு அடுத்தபடியாக சுமார் 20 லட்சம் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை கட்டுவது என 2 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என எகிப்தின் திட்ட அறிக்கை கூறுகிறது.

அதுவரை மக்மூத அப்பாசின் பாலஸ்தீன் அத்தாரிட்டி, காசா, மேற்குகரை பகுதிகளை நிர்வாகம் செய்வது என அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாசும் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா கட்டுரை கூறுகிறது. எனினும், பாலஸ்தீனத்தை யார் ஆட்சி செய்வது என்ற விவகாரம் முற்றிலும் பாலஸ்தீனியர்கள் சார்ந்தது என ஹமாஸ் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply