399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பாலஸ்தீன போராட்டக்குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஜபாலியா அகதிகள் முகாமின் கிழக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய கவசப் பணியாளர்கள் கேரியர் (APC) மீது போராளிகள் டேன்டெம் ராக்கெட்-ப்ரோபல்டு கையெறி குண்டுகளை (RPG) வீசி தாக்குதல் நடத்தியதாக, ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது.
அல்-கஸ்ஸாம் போராளிகள் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணியின் (DFLP) போராளிகளும் காசா நகரின் ஷுஜாயா சுற்றுப்புறத்தின் கிழக்கே நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மீது மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அல்-அக்ஸா தியாகிகள் படைப்பிரிவு ஜபாலியா அகதிகள் முகாமின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மீது கனரக மோட்டார் குண்டுகளையும் வீசியது.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதின், அல்-குட்ஸ் படையினர் ஜபாலியா அகதிகள் முகாமின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகளின் மெர்காவா டேங்கரை தாக்கி அழித்தனர். பாலஸ்தீன போராட்டக்குழுக்களின் அடுத்தடுத்த தாக்குதலால் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நிலைகுலைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.






Leave a Reply