சிரியாவின் புதிய இறைமறுப்பு ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்வதை ஏமன் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் அடிமைகளாக செயல்படுகின்றனர்”“இந்த இறைமறுப்பு ஆட்சியாளர்களுக்கு பணம், ஆயுதம், ஆதரவு வழங்குவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.சிரியாவில் உள்ள “சுவெய்டா பகுதியில் வசிக்கும் ட்ரூஸ் மக்கள் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என இஸ்ரேல் சிரியாவின் ஆட்சியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அதனை ஏற்று, அவர்களுக்கு சிரியாவின் புதிய அரசு பாதுகாப்பு வழங்கிறது.“இன்னொரு பக்கம் சிரியவில் உள்ள குர்துகளுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி தங்களது அடியாளாக பயன்படுத்துகிறது” இவர்களையும் சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் தொந்தரவு செய்வதில்லை.ஆனால் பழைய ஆசாத் அரசை ஆதரித்த சாதாரண, நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்கின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.அண்மையில் பசார் அல் ஆசாத் சார்ந்த அல்வைட்டி பிரிவு ஷியாக்கள் மீது கடும் தாக்குதல் நடத்திய சிரியா அரசுப் படைகள் 100க்கும் மேற்பட்டோரை இனப்படுகொலை செய்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply